சின்னக் கனவு
சிட்டுக் குருவியின்
சின்னக் கனவு

சிறகை விரித்து
சிகரம் தொடுவது;
கனவில் அன்றோ
சிகரம் தொட்டிட
சிறகை விரிக்கும்
நாளும் வந்தது;
சட்டெனக் காற்று
தன்முகம் திருப்ப
சிறகும் மனமும்
கனமாய் மாற
கனவுகளெல்லாம்
கண்முன் கலைந்திட
சிறகினுள்ளே
முகமது மறைந்தது!!
நன்றாக உள்ளது.. சிறு பிழைகளை தவிர்த்து இருக்கலாம்...
ReplyDeleteநன்றி :)
Delete