Wednesday, August 7, 2013

சின்னக் கனவு

சிட்டுக் குருவியின்
     சின்னக் கனவு
சிறகை விரித்து
     சிகரம் தொடுவது;
கனவில் அன்றோ
     சிகரம் தொட்டிட
சிறகை விரிக்கும்
     நாளும் வந்தது;
சட்டெனக் காற்று
     தன்முகம் திருப்ப
சிறகும் மனமும்
     கனமாய் மாற
கனவுகளெல்லாம்
     கண்முன் கலைந்திட
சிறகினுள்ளே
     முகமது மறைந்தது!!

Thursday, June 20, 2013

Rope Dance

Is it strange or
Is it not!
To feel so sure when
It is not;
Questions in thousands
And answers none;
Yet I am convinced
There will be one;
Dreams of life
On sleepless nights,
Words of wisdom
To the foolish mind;
Hopeless it may seem
But with so much hope
On a rope I am dancing
To the tunes of time!

Monday, January 28, 2013

In the pursuit of chasing dreams!!


Runs my life in inverted hours!!
Trying to find reality
In the virtual world of video calls;
Faking smiles in fleeting time
Altered feelings and mutated looks;
Letting the truth be forgotten
In the pursuit of chasing dreams;
And the memories of the forgotten
Following like a shadow – forever…

Sunday, January 27, 2013

கனவின் தேடலில்


தலைகீழ் நேரம்!
காணொளி அழைப்பில் 
மெய்நிகர் உலகம் 
மெய்யான பாசம்; 
மெய்யான உலகில் 
பொய்யான உறவுகள்;
உணர்வுகள் சிதைந்து 
உருமாறிய தோற்றம்;
கனவின் தேடலில் 
தொலைகிறது நிஜம்
நிஜங்களின் நினைவுகள் 
நிழலாய்த் தொடர..


Saturday, January 19, 2013

வேதனையின் பின்னணியில்...

இரவின் நிசப்தத்தில் 
    என்னுள் தனிமை;
தனிமையின் இனிமையிலும் 
    என்னுள் விசும்பல்;
இனம்புரியா  வேதனையால் 
    கண்ணீரற்ற அழுகை;
என்னுள்ளே வலியதனை 
    எங்கோ உணர்கிறேன்;
சிந்தனையைத் திசைமாற்ற 
    ஏதேதோ செய்கிறேன்..
செய்யும் செயலனைத்தும் 
    வேதனையின் பின்னணியில்...

Friday, January 18, 2013

இவற்றோடு...

நேற்றைய பொழுது இரயில் பயணத்தில்
வெற்றுத்தாளில் வரிகளாய் நிரம்பின:
காதில் ஒலித்த வாக்மேன் இசையும்,
முகத்தை வருடிய மெல்லியக் காற்றும்,
கண்ணில் பட்டப் பூக்களின் வண்ணமும்,
சலனமற்ற குளத்துத் தாமரையும்,
கடந்து சென்ற காவிரி ஆறும் - இவற்றோடு 
தூங்கிக் கிடந்த ஞாபகங்களும்....

Sunday, January 13, 2013

மழை

சுட்டெரிக்கும் வெயில்
சட்டென குறைய
வெளிர் நீல வானம்
மெல்லக் கருத்திட
சுகமான குளிர்காற்றில்
வீசியது மண்வாசனை..
கையின் மேலதிலே
ஒரு துளி விழுந்திட
அனிச்சையாய் கண்கள்
அண்ணாந்து பார்த்தன..
மேலும் ஒரு துளி
கண்ணில் விழுந்திட
சட்டென இமைமூடி
உடல் முழுதும் சிலிர்த்திட்டேன்..
மனதின் ஆழத்தில்
உண்டான இன்பமெல்லாம்
மழையாய்ப்  பெய்திட
நனைந்தேன் நான் தனிமையாய்!

Monday, January 7, 2013

ஆத்திரம்

அன்றொரு நாள் ஆத்திரத்தில்
தோண்டிவிட்டேன் நினைவுகளை;
பேய் பிடித்து ஆடின
ஆள் மனதை சிதைத்தன
நாவில் விஷம் ஊட்டின
ஆடி பின் அடங்கின...
நிஜங்களோ இன்று தொலை தூரம்
நினைவெல்லாம் நிசப்தம்...

Sunday, January 6, 2013

கனவாய் கழிந்தது..

மாலை நேர மரத்தடி நிழலில் 
மெல்லிய காற்று மிதமாய் வீச 
இயற்கையை இரசிக்கும் உந்தன் தோளில்  
உன்னை இரசித்து நானும் சாய்ந்தேன்..
சட்டெனக் காற்று என் முகம் வருட 
ஒரு கணம் இமைகளை மூடித் திறந்தேன்;
காற்றில் கலைந்த என் காதோர முடியை 
உன் விரல் ஒதுக்க தேகம் சிலிர்த்தேன்...
உன் கைவிரலில் நெட்டி எடுத்து 
இருளும் வரையிலும் கதைகள் பேசி 
கண்ணும் கண்ணும் பிரியாவிடை பெற 
கனவாய்  கழிந்தது நேற்றய இரவும்...