Monday, June 22, 2015

கண்கள் காண்பது காட்சியின் பிழையோ!
வண்ணங்கள் யாவும் விழியின் மாயையோ!
எண்ணங்கள் எல்லாம் ஏமாற்றக் கலவையோ!
நகரும் நொடிகளும் நொண்டிக்குதிரையோ!

Wednesday, April 29, 2015

இம்மண்ணில்

என்னை மறந்தேன்,
என் தனித்துவம் தொலைத்தேன்;
முன்ஜென்ம பாவம் புரிந்தேன்
இம்மண்ணில் பெண்ணாய்ப் பிறந்தேன்!