Wednesday, September 28, 2011

தேடல் தொடர்கிறது!

வெறும் வருடங்களென வாழ்க்கை நகர்ந்துவிடவில்லை

தேன் தேடலில் தேனிக் கொட்டாய்,

சிப்பியைத் தேடிச் சிறு முத்தைக் கண்டாற்போல்,

விதவிதமாய் அனுபவம் கண்டேன்!


வெறும் அனுபவங்களெனத் தேடல் நின்றுவிடவில்லை

நடுக்கடல் ஆழத்து சங்கின் ஒலியாய்

இதுநாள்வரைப் புலப்படா உண்மையை உணர்ந்தேன்,

தேடலின் பயனாய் அனுபவத் துணைக்கொண்டு!


வெறும் பயணைக் கண்டு வாழ்க்கை முற்றுபெறவில்லை

தேடல் தொடர்கிறது ஒளியின் பரவலாய்;

இருள் நீங்கி பொருள் புலப்பட

முடிவறியாப் பயணத்தில் நான்!

3 comments:

  1. Its தேடலின் பயனாய், not பயணாய் :)

    ReplyDelete